செங்கல்பட்டு: சேலத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு ( எண்.22154) விரைவு ரயில் இயங்கி வருகிறது. அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கும் விரைவு ரயில் (எண் 22153) இயக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, எதிர்வரும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, இந்த இரண்டு மார்க்கத்தில் இயங்கும் விரைவு ரயில்களும், மேல்மருவத்தூரில் 47 நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், டிசம்பர் மாதம் 22 ம் தேதி முதல், அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி வரை இரு நிமிடங்கள் மட்டும் மேல்மருவத்தூரில் இந்த இரண்டு ரயில்களும் நின்று செல்லும். சென்னையில் இருந்து சேலம் செல்லும் விரைவு ரயில், ரயில்வே நேரப்படி 01:13 மணிக்கு வந்து 01:15 மணிக்கு புறப்படும், மறு மார்க்கத்தில் சேலத்தில் இருந்து புறப்படும் ரயில் 01:55 மணிக்கு மேல்மருவத்தூர் வந்து 01:57 மணிப்பு புறப்படும்.
தற்போது, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு இருமுடி சுமந்து வரும் பக்தர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தென் இந்தியாவின் முதல் வந்தேபாரத் ரயில் சேவை; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்