தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனே திறப்பது தொடர்பாக அறிவியல், சுற்றுச்சூழல், தொழில்நுட்ப நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் "கரோனா பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் போதிய அளவில் தடுப்பூசி உற்பத்தியை ஈடுசெய்ய முடியவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழ்நாடு அரசிடம் வழங்குமாறு அறிவுறுத்தியிருத்தார். தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் தடுப்பூசி தயாரிக்க முடியும்.
உரிய முடிவை எடுக்க நாடாளுமன்ற நிலைக்குழுவை உடனே கூட்டி முக்கிய முடிவை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.