செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதிக்கும் கட்சியினர்கள் தங்களது வேட்பாளரை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இரு தினங்களுக்கு முன்னர் செய்யூர் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக கனிதா சம்பத் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தங்கள் தொகுதிக்கு சிறிதும் தொடர்பே இல்லாத கனிதா சம்பத்தை அதிமுக வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் திமுகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் திருப்போரூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தனபாலையே செய்யூர் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் பாண்டிச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உலக சிறுநீரக தினம்! கிராமப்புற மக்களுக்கு தேவை விழிப்புணர்வு!