செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கோழியாளம் கிராமத்தைச் சேர்ந்தவர், இரட்டைமலை சீனிவாசன். இவரின் நினைவாக மண்டபம் கட்டுவது குறித்து 2018-19ஆம் ஆண்டில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்பேரில், அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை அருகில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்ட 2020ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் நினைவு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில், பொதுப்பணித் துறையினர், கட்டட பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: காவல் துறை டிஜிபி மகனின் ஐ-பேட் திருட்டு!