ETV Bharat / state

மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது! - Police investigation

சென்னை: தாம்பரம் அருகே மருந்து கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியைக் காவல் துறையினர் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

Police round up Rowdy for intimidation!
Police round up Rowdy for intimidation!
author img

By

Published : Aug 1, 2020, 1:13 AM IST

சென்னை தாம்பரத்தை அடுத்த மன்னிவாக்கம் பகுதியில் மருந்து கடை நடத்திவருபவர் வினோத். கடந்த 3 நாள்களுக்கு முன் வினோத்திடம் ரவுடி சிலம்பரசன் பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஓட்டேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், கூடுவாஞ்சேரி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஓட்டேரி காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை மிரட்டல் விடுத்த சிலம்பரசன் தேடப்பட்டுவந்தார்.

இந்நிலையில் இரும்புலியூர் பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலம் தப்பிச்செல்ல முயன்ற நிலையில், சிலம்பரசனைக் காவல் துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மூன்று கைபேசி, கத்தி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து காவல் துறை மேற்கொண்ட விசாரணையில், சிலம்பரசன் மீது ஏற்கெனவே ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளதும், பொழிச்சலூர் பகுதியில் இரும்பு வியாபாரியை மிரட்டியதாக சங்கர்நகர் காவல் துறையினரால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த 22ஆம் தேதி அவர் வெளியே வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து பேசிய கூடுவாஞ்சேரி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ”செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ரவுடிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. வியாபாரிகள், பொதுமக்கள் ரவுடிகள் இடையூறு செய்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவர் பெயர், விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.