ETV Bharat / state

செங்கல்பட்டில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு! - The police fire on the rowdy

The police fire on the rowdy: போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The police fire on the rowdy
போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 1:43 PM IST

செங்கல்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தணிகா என்ற தணிகாசலம். இவர் மீது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் தணிகாசலத்தை A+ ரவுடி பிரிவில் போலீசார் வகைப்படுத்தி வைத்திருந்தனர். அதேநேரம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் தணிகாசலத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த தணிகாசலத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, செங்கல்பட்டு தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கி இருந்த தணிகாசலத்தை நேற்று (அக்.11) இரவு கைது செய்து சித்தாமூர் காவல் நிலையம் அழைத்து வந்து கொண்டிருந்துள்ளனர்.

இவ்வாறு வரும் வழியில் மாமண்டூர் பகுதியில் கார் வந்தபோது, தணிகாசலம் போலீசார் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக காவலர்களைத் தாக்கி தப்பித்து ஓட முயற்சி செய்து உள்ளார். இதனால் வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், தணிகாசலத்தின் வலது கை, வலது கால் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.

இதனால் படுகாயம் அடைந்த தணிகாசலத்தை போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வந்த 12 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 2 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.