ETV Bharat / state

ஆம்லெட்டுக்காக மச்சானை கொன்ற மாமன் கைது! - Crime news

தன்னைக் கேட்காமல் ஆம்லெட் எடுத்து சாப்பிட்ட பாசக்கார மச்சானை போதையில் அடித்துக் கொன்ற மாமனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 4, 2023, 9:02 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர், முருகன். இவரது மச்சான் செல்லப்பன். இவர்கள் நேற்று (ஆக.03) மாலைப் பொழுதில் மது அருந்தியுள்ளார்கள். அதன் பின்னர் உணவகம் ஒன்றில் உணவு வாங்கிக் கொண்டு, கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்தில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தின் முன் அமர்ந்து இருவரும் சாப்பிட்டதாகத் தெரிகிறது.

அப்போது முழு போதையில் இருந்த செல்லப்பன், உணவுப் பொட்டலத்தில் இருந்த ஆம்லெட் ஒன்றை எடுத்து சாப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. தன்னைக் கேட்காமல் ஆம்லெட்டை எடுத்து சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த மாமன் முருகன், மச்சான் செல்லப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருவரும் போதையில் இருந்ததால் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. போதை தலைக்கேறிய நிலையில் முருகன், அருகில் இருந்த கட்டையை எடுத்து செல்லப்பனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த செல்லப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்த செல்லப்பனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலையாளி முருகனை கைது செய்தனர்.

இதையும் படிங்க: ‘நானும் ரவுடி தான்’... என்னை தெரியாத ஆளே இல்ல... பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.