ETV Bharat / state

புதுமாப்பிள்ளை கார் மோதி உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காணொலி! - chengalpattu latest news

அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட புதுமாப்பிள்ளை, கார் மோதி உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காணொலி வெளியாகி காண்போரை பதைபதைக்க வைக்கிறது.

கார் மோதுவது தொடர்பான சிசிடிவி காணொலி
கார் மோதுவது தொடர்பான சிசிடிவி காணொலி
author img

By

Published : Sep 18, 2021, 8:00 PM IST

Updated : Sep 18, 2021, 10:07 PM IST

செங்கல்பட்டு: மகேந்திரா சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தினமும் அதிகாலையில் மகேந்திரா சிட்டி பகுதியில் செல்வம் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடந்த 13ஆம் தேதி அதிகாலை, வழக்கம்போல் செல்வம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னே அதிவேகமாக வந்த கார், எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த செல்வம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (செப்.18) சிகிச்சை பலனளிக்காமல் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

கார் மோதுவது தொடர்பான சிசிடிவி காணொலி

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவிக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுத்தபோது விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த செல்வத்துக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது கார் மோதி செல்வம் தூக்கி எறியப்படுவது தொடர்பான சிசிடிவி காணொலிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைக்கிறது.

இதையும் படிங்க: திருமண நிகழ்ச்சியில் நடிகர் விமலின் செல்போன் திருட்டு

Last Updated : Sep 18, 2021, 10:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.