ETV Bharat / state

ரூ.55 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு! - Chief Minister of Tamil Nadu inaugurated the new flyover

செங்கல்பட்டு: பாதுகாப்பான போக்குவரத்திற்காக ரூ.55 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!
புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!
author img

By

Published : Sep 17, 2020, 2:47 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே புதியதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2004ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டது. பின்னர், நிலம் ஆக்கிரமிப்பு பணிக்காக கைவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து நிலம் அனைத்தும் கையகப்படுத்தப்பட்ட பின் பணிகள் தொடங்கியது. இது மட்டுமில்லாமல் இன்னும் பல மாவட்டங்களுக்கு புறவழிச் சாலைகள், மேம்பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் 2 யூ வடிவ மேம்பாலங்கள் 108 கோடி ரூபாய் மதிப்பில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!

இவ்விழாவில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், காஞ்சிபுரம் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட செயலாளர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், துணை மாவட்ட ஆட்சியர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:திருப்பரங்குன்றம்-பழங்காநத்தம் புதிய பாலம்; மண் சேகரிப்பு பணி தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.