ETV Bharat / state

எம்ஜிஆர் பாட்டு படித்து படித்து, தமிழ் தாய் வாழ்த்தை மறந்த அமைச்சர்! - தமிழ்தாய் வாழ்த்து

உய்யாலி குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தின் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் பாடலை சரியாகப் பாடி, பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதால் பொதுமக்கள் கேலி செய்தனர்.

minster jeyakumar sung tamil thai vazhthu wrongly

author img

By

Published : Feb 10, 2021, 11:09 PM IST

செங்கல்பட்டு: உய்யாலி குப்பம் பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு தூண்டில் வளைவு அமைப்பதற்கான திட்டத்தின் கீழ் 16.80கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடவில்லை என்பதனால், அமைச்சர் ஜெயக்குமார் உரையாடுவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் சசிகலா - அமைச்சர் ஜெயக்குமார்

அப்பொழுது தமிழ்த்தாய் வாழ்த்து தெரியாமல் உளறினார். பிறகு எம்ஜிஆரின் படகோட்டி படத்தில் உள்ள பாடலை பாடி அசத்தினார். இதனால் பொதுமக்கள் சினிமா பாடல் பாடத் தெரிந்த அமைச்சருக்கு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியவில்லை எனக் கேலி செய்தனர்.

எம்ஜிஆர் பாட்டு படித்து படித்து, தமிழ் தாய் வாழ்த்தை மறந்த அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.