செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அரசு மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து வேளாண் துறை சார்பாக சுமார் 500 விவசாயிகளின் நிலங்களில் உள்ள மணல்களை எடுத்து மகசூல் பெறுவதற்கான சோதனை செய்து காட்டினர். பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமல் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து அறுவடை செய்யப்பட்ட நெல், தானிய வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தா.மோ. அன்பரசன் பார்வையிட்டார்.
மேலும் சுற்றியுள்ள கிராமங்களில் மண் பரிசோதனை செய்ய வேண்டும் என வேளாண் துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, திருப்போரூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இதய வர்மன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், வேளாண்துறை அலுவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் திட்டம் கூடாது என்பதே உறுதியான கொள்கை: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்