செங்கல்பட்டு: மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில், கடந்த 9 ஆம் தேதி இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இந்த ஊராட்சியில் ஒன்றாவது மற்றும் இரண்டாவது வார்டு உறுப்பினருக்கான தேர்தல், 32 ஆம் எண் வாக்குச்சாவடியில் நடைபெற்றது. இதில் 1ஆவது வார்டு உறுப்பினர் சங்கர் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆலப்பாக்கத்தில் மறுவாக்குப்பதிவு
எனவே இங்கு 2ஆவது வார்டு உறுப்பினருக்கான வாக்குச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், தவறுதலாக இரண்டு வார்டுகளுக்கும் சேர்த்து வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நிறுத்தப்பட்டு, மறு வாக்குப்பதிவு இன்று (அக்.11) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: நீட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து: அரசாணை வெளியீடு