ETV Bharat / state

'வசூல் செய்வது மட்டுமே திமுகவின் வேலை!' - எம்.சி. சம்பத்

செங்கல்பட்டு: திமுக ஆட்சிக்கு வந்தால் வியாபாரிகள், ஊரிலுள்ள மிட்டா மிராசுகள் ஒற்றுமையாக இருக்க முடியாது. கூட்டம் நடத்துபவர்கள்-வியாபாரிகள் இடையே வசூல் செய்வது மட்டுமே திமுகவின் வேலை எனத் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் விமர்சனம்செய்துள்ளார்.

எம்சி சம்பத்
எம்சி சம்பத்
author img

By

Published : Feb 25, 2021, 11:11 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கலந்துகொண்டார்.

அதில் அவர் பேசுகையில், "கடந்த பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் வரலாறு காணாத வெற்றிகளையும், முன்னேற்றங்களையும் அதிமுக அரசு கொண்டுசெல்கிறது. வளர்ந்துவரும் மாநிலங்களில் முதலிடத்தை தமிழ்நாடு வகிக்கிறது. மேடைகளில் பொய்ப் பரப்புரை செய்வதே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேலை.

திமுக ஆட்சிக்கு வந்தால் வசூல் செய்வதே வேலை. திமுக ஆட்சிக்கு வந்தால் தகராறு செய்யும் ஒரு ஆட்சியாக விளங்கும். எடுத்துக்காட்டு கடந்தமுறை அவர்கள் ஆட்சிக்காலத்தில் மின்சாரம் சரிவர தராததால், மக்கள் அவர்களை ஆட்சியிலிருந்து நீக்கினர்.

எனவே மக்களுக்கு நல்ல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தக்கூடிய ஆட்சியாகவும், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்து மகளிரை மேம்படுத்தும் ஆட்சியாகவும் ஜெயலலிதா வழியில் வந்த எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக உள்ள இந்த ஆட்சி விளங்குகின்றது. எனவே, மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து இறுதியாக ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 7300 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை, மூன்று சக்கர வாகனம், இஸ்திரிப் பெட்டி வழங்கப்பட்டன. மேலும், பல போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், திருப்போரூர் ஒன்றியச் செயலாளர் குமரவேல் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: Tamilnadu By Election 2019: 'இடைத்தேர்தலில் வெற்றி எங்கள் பக்கம் தான்' - அமைச்சர் எம்.சி.சம்பத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.