செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான மூன்று மருத்துவமனைகளில் ஜாக்கோ புனரமைப்பு மருத்துவ மையங்களை தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று(பிப். 25) தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் அவர் பேசுகையில், “அரசு மருத்துவமனைகளிலும் இந்த ஜாக்கோ புனரமைப்பு மையங்களை திறப்பதற்கு என்னால் முடிந்தவரை அரசுக்கு பரிந்துரை செய்வேன். உலகிலேயே கரோனா நோயிலிருந்து உயிரிழப்புகளை குறைத்து மருத்துவ ரீதியாக வளர்ச்சிப் பாதைக்கு தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
கரோனாவிலிருந்து நாடு மெல்ல மெல்ல மீண்டுவரும் நிலையில் அனைவரும் தகுந்த இடைவெளி முகக்கவசம், சானிடைசர் ஆகியவை பயன்படுத்தி செயல்பட்டால் இன்னும் வெகு விரைவாக தமிழ்நாடு கரோனாவிலிருந்து மீண்டுவரும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளான ஜீவன், ஜேஎஸ்பி, சாய் கருத்தரிப்பு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளின் உரிமையாளர்களான மருத்துவர் ஓ.வி ஜெயக்குமார், மருத்துவர் அகிலன், மருத்துவர் எம்.சி ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:'ஆளுநர் முடிவுக்குப் பின்புதான் தமிழ்நாட்டில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும்' - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்