செங்கல்பட்டு மாவட்டம் சின்ன களக்காடி கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரி 300 ஏக்கருக்கும் அதிகமான வேளாண் நிலத்துக்கு பாசன வசதி அளிக்கிறது. தற்போது பெய்துவரும் மழையால், இந்த ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இந்த ஏரியின் மதகு உடைந்து பழுதானதால், ஏரி நீர் வெள்ளப்பெருக்காய் மாறி, வேளாண் நிலத்தில் பாய்ந்து ஓடுகிறது.
இதனால் 250-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவுள்ள பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரிக்கரையில் கூடிய கிராம மக்கள், ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு மதகை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏரி மதகை, உரிய காலத்தில் பொதுப்பணித் துறையினர் சீரமைத்து பழுது பார்த்திருந்தால், இத்தகைய ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளர் வில்சனைச் சுட்டுக் கொன்ற தீவிரவாதி சென்னை விமானநிலையத்தில் கைது!