செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவர் கட்டட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ரக்சயா (20) சிறு வயது முதலே மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். அதற்காக தன்னை தாயார்படுத்துக்கொண்டு பல்வேறு அழகி போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட அளவிலான அழகிப் போட்டியில் கலந்து கொண்டு ரக்சயா வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து மிஸ் இந்தியா போட்டிக்குத் தேர்வு செய்ய இந்த மாதம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியிலும் தமிழ்நாடு சார்பாக ரக்சயா கலந்து கொண்டார்.
இதில் ரக்சயா "மிஸ் தமிழ்நாடு" டைட்டிலை வென்றார். வரும் டிசம்பர் மாதம் மிஸ் இந்தியா தேர்வுக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியா முழுவதும் இருந்து தகுதித் தேர்வு செய்யப்பட்டுள்ள அழகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் ரக்சயாவும் கலந்து கொள்கிறார். மிஸ் இந்தியா டைட்டிலை நிச்சயம் வெல்வேன் என்று ரக்சயா கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் கூலி தொழிலாளியின் மகளாக பிறந்த ரக்சயா மிஸ் இந்தியா போட்டிக்கு தேர்வாகியுள்ளது. அந்த பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: கருணாநிதி அரசால் செய்ய முடிந்தது, ஸ்டாலின் அரசால் செய்ய முடியாதா?