ETV Bharat / state

போலி சாதிச் சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு; காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர் பதவியல் தொடர தற்காலிக தடை! - Shalini velu

Shalini Velu: காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போலி சாதிச் சான்றிதழ் சமர்பித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், காஞ்சிபுரம் 27வது வார்டு உறுப்பினர் ஷாலினி வேலு என்பவர் மாமன்ற உறுப்பினராக செயல்பட நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 11:00 AM IST

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில் 27வது வார்டு உறுப்பினராக தென்னை மரம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஷாலினி வேலு. இவருக்குப் போட்டியாக அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர், விஜயகுமாரி.

ஷாலினி வேலு, மாமன்றத்தில் நடக்கும் கூட்டங்களிலும் பங்கேற்று வந்தார். மேலும், இவர் தற்போது ஓபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மாமன்ற உறுப்பினருக்கான தேர்தலின்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற போலியான சாதிச் சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் என்றும், இவரது வெற்றி செல்லாது எனவும், அவருக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்ட விஜயகுமாரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு.செம்மல் முன்னிலையில் நடந்து வந்த நிலையில், விசாரணைக்கு ஷாலினி தரப்பில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, எதிர் தரப்பில் தற்போதைக்கு இவர் மாமன்ற உறுப்பினராக நீடிக்க தடை விதிக்கக் கோரி தடை ஆணை கோரப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 27வது வார்டு மாமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்த ஷாலினி வேலு, மாமன்ற உறுப்பினர் பதவியை தொடர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்ந்த மாமன்ற கூட்டங்களிலும் பங்கேற்க தற்காலிகத் தடை விதித்து மாவட்ட நீதிபதி யு.செம்மல் தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிங்க: செங்கல்பட்டு அதிமுக வார்டு உறுப்பினர் சரமாரியாக வெட்டி கொலை - கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.