சென்னை தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த பிரச்னனா(24) அவரது நண்பர் சர்வபொம்மனிடம் பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பதாக ஆசை காட்டி வ்ந்தார். அதோடு அவரிடம் ரூ.40 லட்சம் பணத்தை பெற்று, பல மாதங்களாக போக்கு காட்டினார். இதனிடையே திடீரென தலைமறைனார்.
இதனால், சர்வபொம்மன் ஏப்ரல் மாதம் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து பிரசன்னாவைத் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சென்னை அழைத்துவரப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இன்று (ஆக.27) சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சனைக்காக விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் கைது