செங்கல்பட்டு மாவட்டம் நெல்வாய் கூட்ரோடு, மேலவலம் பேட்டை ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் கலந்துகொண்டு திட்டத்தை விளக்கியும், அப்பகுதிக்கு நியமிக்கப்பட்ட தனிப்பட்ட காவலர்களை அறிமுகப்படுத்தியும் உரையாற்றினார்.
அதில், "காவலர்கள் கிராமங்களைத் தனிப்பட்ட அக்கறை செலுத்தி கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் அச்சமின்றி தங்கள் புகார்களை, காவல் துறையில் அளிக்க வழிவகை செய்ய வேண்டும்.
நேரிடையாகப் புகாரளிக்க அவசியமில்லா விட்டாலும், காவல் துறையை அணுகி பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண வகைசெய்ய வேண்டும். பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: 'திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட தயார்' - நடிகை குஷ்பு