செங்கல்பட்டு தூக்குமரக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபி (38). இவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கன்னியம்மாள் (32). இந்த தம்பதிக்கு மஞ்சுப்பிரியா என்ற ஒரு மகள் உள்ளார்.
கோபிக்கும் கன்னியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவும் ( மே 14) கணவன் - மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கோபியும் கன்னியம்மாளும் இன்று (மே 15) அதிகாலை மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
![suicide](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-kpm-01-husbandandwifesusaid-visual-script-tn10014_15052021140021_1505f_1621067421_25.jpg)
காலை தூங்கி எழுந்த மகள் மஞ்சுப்பிரியா அப்பா அம்மாவும் தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அலறியடித்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அப்பகுதிவாசிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
![suicide](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11768541_suc.jpg)
இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் கோபி - கன்னியம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.