செங்கல்பட்டு: மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலமாகப் பெறப்பட்ட அரசு இணை மானியத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலத் துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் இணைந்து, 320 இஸ்லாமியப் பெண்களுக்கு மானியத்துடன்கூடிய நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து தமிழ்நாடு வந்து, அகதிகள் முகாமிற்கு வெளியே, தனியாக வீடு எடுத்துத் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் 25 பேருக்கு கரோனா சிறப்பு நிதியாக ரூ.4000 வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் பிரியா, கோட்டாட்சியர் ஷாகிதா பர்வீன், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ’சிஎஸ்ஆர் நிதியில் இலவச தடுப்பூசி’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்