செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று (அக். 10) பார்வையிட்டார். அதன்படி மேல மையூர் ஆதிதிராவிடர் அரசு விடுதியை அமைச்சர் பார்வையிட்டார்.
அப்போது விடுதியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால், குடிக்கவும், சமைக்கவும் மாணவர்கள் தெருக்குழாய்களையே நம்பியிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். விடுதிக் காப்பாளர், சமையலர் ஆகியோர் உரிய நேரத்திற்கு விடுதிக்கு வராததால் பெரும்பாலும் தாங்களே சமைத்து உண்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் விடுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதால், தங்களது உடமைகள் அடிக்கடி திருடுபோவதாகவும் மாணவர்கள், அமைச்சரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவர்களின் குறைகளைத் தெளிவாகக் கேட்டறிந்த கயல்விழி செல்வராஜ், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: 'அதிமுகவில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்' - செல்லூர் ராஜூ