செங்கல்பட்டு: இந்தியாவின் தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை (Google CEO Sundar Pichai), உலகின் முதன்மையானதும் புகழ்பெற்ற இணைய தேடுபொறி இயங்குதளமான கூகுளின் முதன்மை செயல் அதிகாரியாக தற்போது பணிபுரிந்து வருகிறார்.
குடும்பத்தினருடன் அமெரிக்காவில் வசித்து வரும் இவர், மாமல்லபுரத்திற்கு திடீரென இன்று (டிச.28) வருகை தந்து, மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்தார்.
ஏற்கெனவே, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இங்கு நடைபெற்றதன் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்த தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமான மாமல்லபுரம், தற்போது கூகுளின் முதன்மை செயல் அதிகாரி வந்து பார்வையிட்டதன் மூலமாக மீண்டும் ஒருமுறை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக, சுந்தர் பிச்சை வருவது குறித்து யாருக்கும் தெரிந்திருக்காத நிலையில், சுற்றுலாப் பயணிகள் பலரும் அவரை தூரத்தில் இருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.
இதையும் படிங்க: TN Govt Pongal Gift:பொங்கல் தொகுப்பில் கரும்பு; முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி!