நகர்ப்புறங்களில் கரோனா தொற்று பரவலின் தீவிரம் அதிகமாக இருப்பதால் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய ஐந்து மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்தார். அதன்படி சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கு ஏப்.26 முதல் ஏப்.29 வரையிலும், எஞ்சிய இரு மாநகராட்சிகளுக்கு ஏப்.26 முதல் ஏப்.28 வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டப் பகுதிகளுக்கும் முழு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பகுதிகள் முழுவதிலும் முழு ஊரடங்கு ஏப்.26ஆம் தேதி காலை 6 மணி முதல் ஏப்.29ஆம் தேதி இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மூன்று மாவட்டங்களின் எல்லைப் பகுதிகள் பின்வருமாறு:
திருவள்ளூர் மாவட்டம்:
ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, மீஞ்சூர், பொன்னேரி, நாரவாரிக்குப்பம்ழூ திருமழிசை, திருநின்றவூர் பேரூராட்சிகள், வில்லிவாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த 13 கிராம பஞ்சாயத்துகள், புழல் ஒன்றியத்தைச் சேர்ந்த ஏழு கிராம பஞ்சாயத்துகள், பூந்தமல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த 28 கிராம பஞ்சாயத்துகள், சோழவரம் ஒன்றியத்தில் சோழவரம், பாடியநல்லூர், நல்லூர், கும்பனூர், ஆங்காடு, விச்சூர், வெள்ளிவாயல், பெருங்காவூர், அலமாதி ஆகிய ஒன்பது கிராம பஞ்சாயத்துகள், மீஞ்சூர் ஒன்றியத்தில் மேலூர், சுப்புரெட்டிபாளையம், கொண்டகரை, வள்ளூர், அத்திபட்டு, நாலூர், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம், வெள்ளிவாயல்சாவடி ஆகிய ஒன்பது கிராம பஞ்சாயத்துகள்
செங்கல்பட்டு மாவட்டம்:
தாம்பரம், பல்லாவரம் வட்டங்களிலுள்ள தாம்பரம் பெரு நகராட்சி, பல்லாவரம் பெரு நகராட்சி, பம்மல் நகராட்சி, அனகாபுத்தூர் நகராட்சி, செம்பாக்கம் நகராட்சி, பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், சிட்லபாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம் ஆகிய 5 பேரூராட்சிகள், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலாம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு, திரிசூலம், பொழிச்சலூர், கவுல்பஜார், சித்தாலபாக்கம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்கலம் ஆகிய 15 கிராம ஊராட்சிகள், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கானாத்தூர் ரெட்டிக்குப்பம், முட்டுக்காடு (பகுதி) ஆகிய 2 கிராம ஊராட்சிகள்
காஞ்சிபுரம் மாவட்டம்:
மாங்காடு பேரூராட்சி, குன்றத்தூர் பேரூராட்சி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம்கட்டளை, மௌலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சிகள்
மேற்கூறிய பகுதிகளில் இந்த ஊரடங்கு காலத்தில் கீழ்கண்ட அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்:
- மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள்
- அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத் துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்
- இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்குத் தேவைப்படும் 33 விழுக்காட்டு பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்
- அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும்
- உணவகங்களில் தொலைப்பேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்
- முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்
- ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்
- ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்கோயம்பேடு போன்ற மொத்த காய்கறிச் சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும்
- அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்
- மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது
- இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது
- இக்காலகட்டத்தில் நோய்த்தடுப்புப் பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும்.
- இப்பகுதிகள் மக்கள் நடமாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்