செங்கல்பட்டு: வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், போக்குவரத்து ஆய்வாளர்கள் விஜயா, கார்த்திக், ஆனந்த் ஆகியோருடன் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு சுங்கச் சாவடி அருகே அரசு அலுவலர்கள் மேற்கொண்ட இந்த சோதனையில் விதிகளை மீறி இயக்கியதாக 170 வாகனங்களை பிடித்து அபராதம் விதித்துள்ளனர்.
அதிக பயணிகளை ஏற்றிய ஷேர் ஆட்டாேக்கள், முகப்பு விளக்கில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள், விதியை மீறி முன்புறம் பம்பர்கள் பாெருத்தப்பட்டிருந்த சொகுசுக் கார்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை சோதனையிட்டு 2.80 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காட்டில் தூக்கில் தொங்கிக் கிடந்த ஆண் சடலம் - காவல் துறையினர் விசாரணை!