ETV Bharat / state

நிதிநிறுவன மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் அட்வைஸ் - its Scam Awareness

நாளுக்குநாள் பெருகி வரும் நிதி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பொருளாதார மோசடிகள் குறித்தும், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பிரபல பொருளாதார நிபுணரும் முதலீட்டு ஆலோசகருமான வ.நாகப்பன், காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன் ஆகியோர் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணலைக் காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 2, 2023, 7:40 PM IST

Updated : May 2, 2023, 8:02 PM IST

நிதிநிறுவன மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் அட்வைஸ்

செங்கல்பட்டு: ஊர்ப்பெயர் தெரியாத நிதி நிறுவனங்கள் திடீரென முளைத்து விடுகின்றன. அவற்றை நம்பி, படிக்காத பாமரர் முதல் நன்கு படித்த வேலையில்லா பட்டதாரிகள், நல்ல பதவியில் உள்ளவர்கள் உட்பட பலரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த தங்கள் பணத்தை 'முதலீடு' (Investment) செய்து ஏமாந்து நிற்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

நிதிநிறுவனங்கள் தரும் ஆஃபர்கள் பின்னால் ஆப்பாகும்: பெரும்பாலும் சாத்தியப்படாத வட்டி விகிதங்களை அல்லது லாபத்தை வாடிக்கையாளர்களுக்குத் தருவதாகக் கூறித்தான் இத்தகைய மோசடி நிறுவனங்கள் வலை விரிக்கின்றன. உதாரணமாக, தங்களிடம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை லாபம் அளிப்பதாக இத்தகைய நிறுவனங்கள் மக்களின் மனதில் ஆசையைத் தூண்டுகின்றன. அதாவது, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு '10 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம்!' எனக் கூறுவதை வாடிக்கையான தங்களில் ஆஃபராக கூறுகின்றனர்.

வங்கிகளையே மிஞ்சும் வட்டி, ஏமாற்று வேலையே: வங்கிகளில் நாம் செய்யும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களிலும், அதிகபட்சம் வருடத்திற்கு ஏழு முதல் எட்டு சதவீதம் தான் வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு லட்ச ரூபாய் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed deposit) எனும் திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால், ஒரு வருடத்திற்கு கிடைக்கும் அதிகபட்ச வட்டியே ரூ.6000-லிருந்து ரூ.8000-ஐத் தாண்டவே தாண்டாது. மாதத்திற்கு ரூ.500 முதல் ரூ.650 தான் நமது கணக்கில் வட்டியாக வரவு வைக்கப்படும்.

மோசடி செய்ய இடம் தராதீர்கள்: ஆனால், போலி நிதி நிறுவனங்கள் மாதத்திற்கே ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை அளிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறுவதால், வெளிச்சத்தைக் கண்ட வெட்டுக்கிளிகளைப் போல, மக்களும் ஏமாந்து விடுகிறோம். விட்டில் பூச்சிகளைப் போல் அனைத்து தரப்பினரும் முதலீடு செய்து ஏமாந்து நிற்கின்றனர். மோசடி பேர்வழிகளின் ஏமாற்று வேலை நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் மட்டும் நின்று விடுவதில்லை. இத்தோடு நிற்காத இந்த மோசடி பேர்வழிகளின் ஏமாற்று வேலைகள் மண்ணுளிப் பாம்பு, ஈமு கோழி வளர்ப்பு, இரிடியம், பணத்தை இரட்டிப்பாக்கித் தருதல் எனப் பல வகைகளிலும் தொடர்கின்றன.

மற்றொருபுறம் அங்கீகரிக்கப்படாத சீட்டு பிடிக்கும் நிறுவனங்கள் மக்களிடம் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருகின்றன. எத்தனை முறை, எத்தனை பேர் ஏமாந்தாலும் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கும் பலர் தயாராக உள்ளனர் என்பதே, இதில் வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாகும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.

சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட மெகா மோசடி நிதி நிறுவனங்களில் முக்கியமானவை ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எஃப்.எஸ். போன்றவை ஆகும். இதில் ஆருத்ராவில் மட்டும் 1,09,285 பேர், ரூ.2,438 கோடியை முதலீடு செய்து மாட்டிக்கொண்டனர்.

முதலீட்டாளர்களுக்கு அள்ளிக் கொடுப்பது தட்டி பறிக்கவே: ஹிஜாவு என்ற மோசடி கும்பலிடம் 89,000 அப்பாவி முதலீட்டாளர்கள் ரூ.4,400 கோடியை இழந்துள்ளனர். ஐ.எஃப்.எஸ். நிறுவனத்தில் 84,000 பேர் ரூ.5,900 கோடியை கொட்டிக் கொடுத்துவிட்டுத் தவிக்கின்றனர். எல்பின் என்ற நிறுவனத்தில் 11 ஆயிரம் பேர், ரூ.962 கோடிகளும், அம்ரோ கிங்ஸ் நிறுவனத்தில் 3 ஆயிரம் நபர்கள், ரூ.161 கோடிகளும் இழந்துள்ளனர். இவை கண்ணுக்குத் தெரிந்த வெளிச்சத்துக்கு வந்த சில மோசடிகளே. இன்னும் வெளியே தெரியாத பல வகையான பொருளாதார மோசடிகள் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக நடக்கின்றன என்பதுதான் உண்மை.

பேராசையே துன்பத்திற்குக் காரணம்: இத்தகைய மோசடிகள் குறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு சிறப்பு பேட்டியளித்த பிரபல பொருளாதார வல்லுநரும் முதலீட்டு ஆலோசகருமான வ.நாகப்பன் கூறும்போது, ''இத்தகைய மோசடிகளில் சிக்கும் பொதுமக்களை மட்டுமே நாம் குற்றம் சுமத்திவிட்டு ஒதுங்கி நின்று விட முடியாது. பேராசையால் பொதுமக்கள் இப்படி செய்கிறார்கள் என்று சுலபமாக சொல்லுவதை விட அடிப்படை பிரச்னையைப் பார்க்க வேண்டும்.

தற்போதைய பண வீக்கத்தைத் தாண்டி ஒவ்வொரு தனி நபரும் சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில், வங்கிகள் போன்றவற்றில் அவர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதம் மற்றும் பண வீக்கத்திற்கு உண்டான வித்தியாசங்களே மக்களை மாற்றி யோசிக்க வைக்கிறது.

மக்களுக்கான அடிப்படைத் தேவைகளே, தற்போது அதிகரித்து வருகின்றன. அவற்றை ஈடுகட்ட எதை செய்தால், எப்படி அதிக வருமானம் வரும் என்று சிந்திக்கும் நிலையில்தான் மக்கள் உள்ளனர். இவற்றை தான் மோசடி நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாக்கி விடுகின்றன.

பள்ளிகளில் பண மேலாண்மையை கற்பிக்கவும்: பள்ளிப்படிப்பில் பல்வேறு விஷயங்களை போதிக்கும் நாம், பணத்தின் முக்கியத்துவம், சேமிப்பின் முக்கியத்துவம், பணத்தை எப்படி ஜாக்கிரதையாகக் கையாள்வது என்பதையும் பள்ளிக்காலத்தில் இருந்தே போதிக்கும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். அதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை அமைப்புகளிடம் புகார் அளிப்பதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

இதுபோன்ற புகார்களைப் பெற மறுப்பது, எல்லைப் பிரச்னை, பல்வேறு விமர்சனங்கள் போன்றவற்றைக் கடந்துதான் புகார் அளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படியே புகார் அளித்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டான நீதி கிடைப்பதில் உள்ள கடுமையான காலதாமதம் போன்றவையே அடிப்படைப் பிரச்னைகளாக உள்ளன.

முதலீட்டில் பக்குவமான புரிதல் அவசியம்: எனவே, பொதுமக்களும் தங்கள் பணத்தை எவ்வாறு பாதுகாப்பாய் முதலீடு செய்வது என்பது குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அனைத்துக்கும் அரசாங்கத்தை எதிர்பார்ப்பது என்பது தவறு. எது சரி? எது தவறு? என்று ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் பொதுமக்களுக்கு இருக்க வேண்டும். உதாரணமாக பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வது எப்படி என்று விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றால் அதற்கு 10-லிருந்து 20 பேர் கூட வருவதில்லை.

ஆனால், 'ஒரு லட்சத்திற்கு மாதம் பத்தாயிரம் தருகிறோம்!' என்று யாராவது கூட்டம் போட்டால், ஆயிரக்கணக்கில் திரள்கின்றனர். இந்த மந்தையாக திரளும் மனோபாவம் மக்களிடத்தில் மாற வேண்டும். மொத்தத்தில், 'நம் பணத்திற்கு நாம் தான் பொறுப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும்' என்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன் ஐபிஎஸ், ''ஒரு வருடத்திற்கு முதலீட்டுக்கு 18 முதல் 20 சதவீதம் வரை தொடர்ந்து லாபம் கிடைத்தாலே, அது ஒரு மிகப்பெரிய வணிக வாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்பு என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கையில், மாதத்திற்கு 10 முதல் 30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்று யாராவது கூறினால், அதை நம்பக்கூடாது.

ஏமாற்றுபவனே சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்போது நாம்: அப்படி லாபம் கிடைக்குமானால், பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடு செய்து வணிகம் செய்து கொண்டிருக்கும் பெரு நிறுவனங்கள் எல்லாமே இந்தத் தொழிலுக்கு வந்துவிடுமே என்பதை பொதுமக்கள் யோசிக்க வேண்டும். நம்பகமான பெரு நிறுவனங்கள், வங்கிகள் சாதிக்க முடியாததை, இப்படிப்பட்ட மோசடி நிறுவனங்கள் எப்படி சாதிக்கும் என்று பொதுமக்கள் சிந்தித்தால், ஏமாறுவதற்கான வாய்ப்பு சுத்தமாக இருக்காது.

தங்கள் பகுதியில் இப்படிப்பட்ட நிறுவனங்கள் கூட்டம் நடத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்தாலோ, அல்லது முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக விளம்பரம் செய்தாலோ, பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தால், மோசடிகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியலாம்' என்று அறிவுறுத்தியுள்ளார்.

மொத்தத்தில் பொதுமக்கள், நடைமுறை யதார்த்தத்தை மீறி வாக்குறுதி அளிக்கும் மோசடி நிறுவனங்களை கண்ணை மூடிக்கொண்டு நிராகரிக்கத் தயங்கினால், வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை உடனடியாக இழக்க நேரிடும் என்பதே உண்மை என்கின்றனர் வல்லுநர்கள்.

இதற்கிடையே, நம்பகமான முதலீட்டிற்கும் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கும் நமக்கு கிடைத்த மாபெரும் எளிமையான வழியான, நமது வீட்டின் அருகில் உள்ள இந்தியா போஸ்ட் ஆபிஸ் துறையை மறந்துவிடுகிறோம். உண்மையில், நமது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மிகவும் சுலபமான முறையில் இந்த வருமானம் ஈட்டலாம். அந்தவகையில், 'பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி கணக்கு, தேசிய சேமிப்புச் சான்றிதழ், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), தபால் அலுவலக சேமிப்பு கணக்கு மற்றும் 5 ஆண்டு கால வைப்பு' உள்ளிட்ட ஆபத்து இல்லாத முதலீட்டின் கீழ் இந்திய தபால் துறை மக்களின் நலனுக்காகவே முற்றிலுமாக செயல்பட்டு வருகிறது என்பதை இனியும் மறக்காமல் இருப்போம்.

இதையும் படிங்க: "என் சாவுக்கு ஐஎஃப்எஸ் நிறுவனம்தான் காரணம்" - ரூ.26 லட்சம் பணத்தை இழந்த நபர் விபரீத முடிவு!

Last Updated : May 2, 2023, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.