செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்தை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ திமுக என்றாலே சுயநலம். சுயநலம் என்றாலே திமுக. ஐயோ, பாவம் குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு அமுதசுரபி, அள்ள அள்ள குறையாதது. பாமக தேர்தல் அறிக்கை ஒரு வளர்ச்சி திட்டம்.
கல்வி, மருத்துவம் முற்றிலும் இலவசம். உயர்கல்வியும் படிக்கலாம். இந்தத் தொகுதியில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ளதால் அதனை தீர்க்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அமல்படுத்தப்படும். மாமல்லபுரத்தின் சிற்பங்கள் நகரம் ஒன்று அமைக்கப்பட்டு அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : பாசிச சக்திகள், திமுக சந்தர்பவாத அரசியலில் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் - ஓவைசி பேச்சு