செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த நாவலூரில் உள்ள, நட்சத்திர கேளிக்கை கட்டடமான மெரினா மாலில், பிக்பாஸ் வெற்றியாளர் நடிகர் ஆரி மக்களை சந்தித்து உரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில், “20 லிருந்து 25 சதவீத புற்றுநோய்கள் புகையிலையால் உருவாகிறது. 30 லிருந்து 35 சதவீத புற்றுநோய்கள் உணவால் உருவாகிறது. ஆகையால் நாம் உண்ணக்கூடிய உணவு தரமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
எனவே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் தானியங்களை வைத்து நல்ல உணவுகளை உட்கொண்டு புற்றுநோயை அகற்ற வேண்டும். ஆண்டிற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் மார்பகப் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
பின்னர் தமிழர் பண்பாடு கலாசாரம் மிக்க பறை இசை நடன கலைஞர்களுக்கும், சிலம்பாட்டக் கலைஞருக்கும், பரிசுகளை வழங்கினார். அப்போது பொதுமக்கள் ஆரியிடம் ஃசெல்பி எடுத்துக்கொண்டார்.
இறுதியாக விவசாயிகளை பெருமைப்படுத்தி, விவசாயிகளுக்கு அத்தியாவசிய பொருளான ஏர் உழும் ஏர் கலப்பையும், தரமான நாட்டு விதைகளையும் வழங்கி சிறப்பித்தார்.
இதையும் படிங்க: முதல் முறையாக ஸ்ட்ரிக்ட் ஆபிசராக களமிறங்கும் ஆரி