இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாட்டில் மொத்தமாக கரோனா வைரஸ் தொற்றால் 12 லட்சத்தையும் தாண்டி பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இரண்டாயிரத்து 700 பேர் உயிரிழந்தும் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இதில்,செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேரடி வீதியில் இயங்கிவரும் தமிழ்நாடு மின்சார வாரிய நகர பகிர்மான அலுவலகத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் யுவராஜ் என்பவருக்கு கரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நகர அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிவதால், வேறு யாருக்கும் தொற்று பரவாமல் இருக்க மதுராந்தகம் நகராட்சி மூலம் அலுவலகத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மதுராந்தகம் நகர மின்வாரிய அலுவலகம் இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டது.
இதையும் படிங்க...ஒரே நாளில் முதல்முறையாக 5,849 பேருக்கு கரோனா