ETV Bharat / state

தனியார் கல்லூரியில் 118 பேருக்கு கரோனா - அமைச்சர் ஆய்வு! - corona issues

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 118 பேருக்கு, கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மேலும் 118 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு

author img

By

Published : May 31, 2022, 11:00 PM IST

Updated : Jun 1, 2022, 11:51 AM IST

செங்கல்பட்டு: திருப்போரூர் அடுத்த மேலகோட்டையூரில் வி.ஐ.டி தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஏறத்தாழ 5700 மாணவ- மாணவிகள் அங்கேயே தங்கி பயின்று வருகின்றனர்.

இவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள். ஒரு மாணவருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏறத்தாழ 4 ஆயிரத்து 100 மாணவர்களுக்கு நேற்று(மே30) வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 118 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் இக்கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ’118 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதில் சிலருக்குத் தற்போது நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 118 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு

எனவே, பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறினார். அமைச்சர் ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 77 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு!

Last Updated : Jun 1, 2022, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.