ETV Bharat / state

செங்கல்பட்டில் இன்று முதல் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம் - செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

2022-23ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் இன்று (பிப்.9) முதல் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

செங்கல்பட்டில் இன்று முதல் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி ஆரம்பம்

author img

By

Published : Feb 9, 2023, 6:59 PM IST

செங்கல்பட்டில் இன்று முதல் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 12 முதல் 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள், 19 முதல் 25 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள், 15 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என, பலவகைப் பிரிவினர் இப்போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

இதில் மொத்தம் 51 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும், ஆண்கள் 15,691 மற்றும் பெண்கள் 5,795 என, 21,486 பேர் கலந்து கொள்கின்றனர். மேலும், மாநில அளவிலான முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி ஆகும்.

இன்று(பிப்.09) செய்யூரில் நடைபெறும் போட்டிகளில் சிலம்பம், கபடி, மட்டைப்பந்து உள்ளிட்டப் பல போட்டிகளில் 8,533 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதையடுத்து இவ்விழாவில் தலைமை வகித்து பேசிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், 'இன்றைய சூழலில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்றவை அனைவருக்கும் அத்தியாவசியத் தேவையாக உள்ளன. போட்டித்தன்மையும், சவாலும் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழலில், இத்தகைய போட்டிகள் விளையாட்டு வீரர்களுக்கு சவால்களை எதிர்கொள்ளும் துணிவையும், பக்குவத்தையும் அளிக்கின்றன. பொதுவாக விளையாட்டுப் போட்டிகள் குழு மனப்பான்மையை ஊக்குவிக்க ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

தமிழ்நாடு அளவில் பங்குபெறும் வீரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்த அளவில், செங்கல்பட்டு மாவட்டம் முதல் 5 இடங்களில் வருவது என்பது பெருமைக்குரிய விஷயம்' என்று கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி பிரதீப் பேசும்போது, 'போட்டிகளில் கலந்து கொள்வது என்பதே வெற்றிதான். இதில் வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. விளையாட்டுப் போட்டிகள் என்பது விளையாட்டோடு முடியாமல், தலைமைப் பண்பு, குழு மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்கும் சிறந்த வாய்ப்பு என்று அனைவரும் நினைக்க வேண்டும். கபடி, கிரிக்கெட் என அனைத்துமே விளையாட்டு என்பதைத் தாண்டி, தலைமைப் பண்பு, குழுவோடு ஒன்றிணைதல் போன்றவற்றை கற்பிக்கும் பாடமாக நாம் கொள்ள வேண்டும்' என்று பேசியுள்ளார்.

இதையும் படிங்க:அதானி குழுமத்திற்கு எதிரான மனு நாளை விசாரணை - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.