செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், ஆட்சியர் ஜான் லூயிஸிடம் திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை பட்டா, வீட்டுமனை பட்டா, பசுமை வீடுகள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஆகிய பல்வேறு கோரிக்கை அடங்கிய 205 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 13 நபர்களுக்கு 63 ஆயிரத்து 323 ரூபாய் மதிப்பிலான சலவை பெட்டிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கான 20 நபர்களுக்கு 2 லட்சத்து 56 ஆயிரத்து 950 ரூபாய் மதிப்பிலான செல்போனும் வழங்கப்பட்டன.
அதே போல், மாதாந்திர உதவித்தொகையாக 36 ஆயிரம் ரூபாயும், கோட்டத்திற்கு உள்பட்ட 15 நபர்களுக்கு இருளர் இன சான்றிதழும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பாக கருணை அடிப்படையில் ஒரு நபருக்கு பணி ஆணையையும், வருவாய் துறை சார்ந்த 15 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் லலிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் ஜெகதீபன், செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.