செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு ஈசிஆர், ஓஎம்ஆர் சாலையில் உள்ள நிலங்களை விற்கவும் வாங்கவும் பதிவுசெய்ய சார் இணைப்பதிவாளர் செல்வ சுந்தரி ரூ. 5,000 ரூபாயிலிருந்து ஐந்து லட்சம்வரை லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரை பணி நீக்கம் செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகம் அருகே பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாமக மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பாமக மாநில துணை செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டிலேயே திருப்போரூரில்தான் நிலங்களை பதிவு செய்ய அலுவலர்கள் அதிக லஞ்சம் வாங்குகின்றனர். திருப்போரூர் சார் இணைப்பதிவாளர் செல்வ சுந்தரியை பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லை என்றால் பாமக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: வழக்குப் பதிவை தவிர்க்க லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளர்கள் கைது!