செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்துள்ள பெருங்கருணையில், மரகத தண்டபாணி திருக்கோயில் உள்ளது.
புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான இதற்கு, நடுப்பழனி என்ற பெயரும் உள்ளது. மற்ற முருகன் திருத்தலங்களை விட, மிக உயரமான முருகப்பெருமான் சிலை, இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் நேற்று (மார்ச்.28) பங்குனி உத்திரத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
திருவிழாவுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது, பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் போன்ற பல வழிமுறைகளில், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுத்திட காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: திருத்தணி முருகன் கோயில் குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு