நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழுவினர் இன்று (டிச.06) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். சில நாட்களுக்கு முன்னதாக உருவான நிவர் புயலாலும், தற்போது ஏற்பட்ட புரெவி புயலாலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
இதன் காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. குறிப்பாக, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வரும் மத்தியக் குழுவினர், இன்று செங்கல்பட்டு மாவட்ட பாதிப்புகளைப் பார்வையிடுகின்றனர்.
காலை 10.30 மணியளவில் பெரும்பாக்கம் ஒன்றியம், நூக்கம் பாளையத்திற்கு மத்தியக் குழுவினர் வருகை தந்து பார்வையிட உள்ளனர். பின்னர் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் உள்ள பூந்தண்டலம் பகுதிக்கு பகல் 12.30 மணியளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து திருக்கழுக்குன்றம் வட்டத்திலுள்ள இரும்புலிச்சேரிக்கு பிற்பகல் ஒரு மணியளவில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கின்றனர்.
மதியம் இரண்டு மணியளவில் சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெடால் பகுதிக்கு வரும் மத்தியக் குழுவினர், அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க:புரெவி புயல்: பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்ட எம்எல்ஏ!