திருவண்ணாமலை நியூ கார்க்கானா நகர் பகுதியை சேர்ந்த ஷண்முகம் என்பவரது மகன் கவின்குமார் (வயது23). இவர் கோவை இந்துஸ்தான் கல்லூரியில், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, ஐஏஎஸ் தேர்விற்காக சென்னையில் நன்பர்களோடு தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சொந்த ஊருக்கு செல்வதற்காக, செங்கல்பட்டு வித்யாசாகர் கல்லூரி அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தனது நண்பர் முகம்மது ஆதாம் (வயது23) என்பவருடன், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னை நசரத்பேட்டைபகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் ரவீந்திரன் (வயது 60) என்பவர் தனது சொந்த காரில் தன் மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் கோயில்பட்டிக்கு சென்றுவிட்டு, சென்னைக்கு வந்த போது, தனது காரை முந்திச்செல்ல வந்த கனரகவானத்தை முந்தி செல்வதற்காக, தனது காரை அதிவேகமாக ஓட்டியுள்ளார்.
அப்போது தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு திருச்சி சென்னை நெடுஞ்சாலையிலிருந்து, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு தாறுமாறாக சென்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில், ஐஏஎஸ் மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையைக்கு அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவின்குமாருடன் வந்த முகமது ஆதாம் காலில் பலத்த காயம் ஏற்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே கார் விபத்து: 4 காவலர்கள் படுகாயம்!