செங்கல்பட்டு: மாமல்லபுரம் அடுத்த ஈசிஆர் சாலை சூளேரிக்காட்டில் அதிகாலை 2 மணியளவில் நடிகை யாஷிகா தனது பெண் தோழி, இரண்டு ஆண் நண்பர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், யாஷிகாவின் ஹைதரபாத்தைச் சேர்ந்த பெண் தோழி உயிரிழந்தார். மேலும், யாஷிகாவும், இரண்டு ஆண் நண்பர்களும் படுகாயமடைந்தனர்.
குடிபோதை காரணமா?
இதனைக் கண்ட அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகாபலிபுரம் காவல் துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![கார் விபத்தில் நடிகர் யாஷிகா படுகாயம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12565146_t.jpg)
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாஷிகாவும் அவரது நண்பர்களும் குடிபோதையில் இருந்ததால் கார் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு