ETV Bharat / state

Masthan Murder: சாதிக் பாஷா கொலையைப்போல சந்தேகம் - மஸ்தானின் தம்பி மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு.. - சாதிக் பாஷா கொலை வழக்கு

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி ஆதம் பாஷா கைது செய்யப்பட்டு போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ள நிலையில், யாரையோ காப்பாற்ற தன் கணவரை பலிகடா ஆக்கி உள்ளதாகவும் வழக்கில் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரியும் ஆதம் பாஷாவின் மனைவி, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மஸ்தான் கொலை வழக்கு
மஸ்தான் கொலை வழக்கு
author img

By

Published : Jan 13, 2023, 6:31 PM IST

Updated : Jan 13, 2023, 9:42 PM IST

Masthan Murder: சாதிக் பாஷா கொலையைப்போல சந்தேகம் - மஸ்தானின் தம்பி மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு..

சென்னை: கடந்த 22ஆம் தேதி சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்த முன்னாள் எம்.பி மஸ்தான், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. தனது தந்தையின் மரணத்தில் மர்மம் நிலவுவதாக மஸ்தானின் மகன் ஹரிஸ் ஷாநிவாஸ் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

முன்னாள் எம்.பி. மஸ்தானின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் மஸ்தானின் செல்போன் சிக்னல், அவர் பேசிய அழைப்புகள் குறித்து பொலீசார் துப்பு துலக்கினர்.

மேலும் சம்பவத்தன்று மஸ்தானுடன் காரில் சென்ற அவரது தம்பியின் மருமகன் இம்ரான் பாஷாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நண்பர்கள் உதவியுடன் மஸ்தானை கொன்றதாக இம்ரான் பாஷா ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் வழக்கு தொடர்பாக இம்ரான் பாஷா அவரது கூட்டாளிகள் தமீம், நசீர், தலகீத் அஹ்மது, லோகேஷ்வரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், 15 லட்ச ரூபாய் கடன் பெற்றது மற்றும் சொத்து பிரச்சினைகள் காரணமாக அவரது தம்பி ஆதம் பாஷாவிடம் மஸ்தான் கோபமாக பேசியதாகவும், அதற்காக மஸ்தானை கொன்றதகாவும் இம்ரான் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் மஸ்தான் கொலையில் அவரது தம்பி ஆதம் பாஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய போலீசார், வழக்கு தொடர்பாக அவரை கைது செய்து வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து ஆதம் பாஷா உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மஸ்தான் கொலை வழக்கில் தனது கணவருக்கு துளியும் சம்மந்தம் கிடையாது என ஆதாம் பாஷாவின் மனைவி ஜீனத் பேகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆதாம் பாஷாவின் மனைவி ஜீனத் பேகம் டிஜிபி அலுவலகத்தில் புகாரில் அளித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜீனத் பேகம் கூறியதாவது, "முன்னாள் எம்.பி மஸ்தான் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில், யாரையோ காப்பாற்றுவதற்காக தமிழக அரசு வழக்கை திசை திருப்ப முயலுவதாக கூறினார்.

குறிப்பாக கொலை வழக்கு போன்று இந்த வழக்கை விசாரிக்காமல் கைது செய்துள்ள ஆதாம் பாஷாவின் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, ஏதோ ஒரு ஆவணங்கள் தொடர்பாக வீட்டில் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

சாதிக் பாஷா மரணமடைந்த விவகாரத்தில் இன்று வரை மர்மம் நீடித்து வரும் நிலையில், அதே போன்று மஸ்தான் கொலை வழக்கும் மாறி இருப்பதாக கூறினார். மஸ்தான் மரண வழக்கை முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என டிஜிபியிடம் கோரிக்கை விடுத்ததாக ஜீனம் பேகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Pongal Bonus: ஆவின் பணியாளர்களுக்கு ரூ.2.70 கோடி பொங்கல் போனஸ்!

Last Updated : Jan 13, 2023, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.