ETV Bharat / state

ஓட்டுக்கேட்கக் கூட தகுதியற்றவர்களா நாங்கள்?

செங்கல்பட்டு: தங்களின் வாழ்வைப் பற்றி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எப்போதுமே கண்டு கொள்வதிலலை என்ற போதிலும், குறைந்தபட்சம் வாக்கு சேகரிக்கக் கூட, அரசியல்வாதிகள் தங்கள் பகுதிகளுக்கு வராமல் புறக்கணிப்பது வேதனையளிப்பதாக இருளர் இன மக்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.

are-we-even-not-worthy-of-asking-votes
are-we-even-not-worthy-of-asking-votes
author img

By

Published : Apr 4, 2021, 5:10 PM IST

Updated : Apr 5, 2021, 1:48 PM IST

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சொந்த நாட்டிலேயே அகதிகள் போல வசிக்கும் இவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை என எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், வாழ்வதற்கான எந்தத் தகுதியும் இல்லாத பொடடல் காடுகளில்தான் பெரும்பாலும் இவர்களின் குடியிருப்புகள் உள்ளன. எல்லா இடங்களிலும் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிகளில் வசிக்கவே இவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

கிடைத்த இடங்களில் குடிசை போட்டு வாழ்ந்தாலும், அங்கிருந்தும் இவர்களை விரட்ட பல்வேறு தரப்பினரும் முயல்வதாகக் இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கால்நடைகள் மேய்வதற்கு இடம் வேண்டும் என்பதற்காக, தங்ககளை இடம்பெயறச் சொல்லும் கொடுமை நடப்பதாகவும் கண்ணீர் வடிக்கின்றனர் இம்மக்கள்.

ஓட்டுக்கேட்கக் கூட தகுதியற்றவர்களா நாங்கள்?

தமிழ்நாடு தன்னிறைவை அடைந்ததாக கூறும் இக்காலத்தில், குடிநீர், மின்சாரம் இதெல்லாம் இவர்களுக்கு எட்டாக்கனிதான். துாய்மை இந்தியாவிற்கு பல்லாயிரம் கோடிகள் செலவழிக்கும் நாட்டில், இவர்களுக்கு கழிப்பறை வசதி கூட கிடையாது. இரண்டு குச்சிகளை நட்டு, பழைய புடவையை அதில் கட்டி, அந்த மறைவிடம்தான் குளியலறை. அதிகாரிகள், அரசியல்வாதிகள் என மனுக்கள் கொடுத்தே ஓய்ந்த இவர்களை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் கூட, பொருட்படுத்துவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

வாக்குக்காக தெருத்தெருவாக, ஊர் முழுதும், செருப்பு தேய நடக்கும் எந்த அரசியல்வாதியும், இவர்களிடம் ஓட்டு கேட்டு கூட எட்டிப்பார்ப்பதில்லை எனக் குமுறும் இவர்கள், அந்தளவிற்கு கேவலமான மனிதப் பிறவிகளா தாங்கள் எனவும் கதறுகின்றனர். அதிகார வர்க்கத்தினர் இவர்களை குறைந்தபட்ச மரியாதையுடனாவது நடத்தினால்தான், மனித சமுதாயத்திற்கே மரியாதை. இல்லையேல், நவீன உலகிலும் கற்காலத்திலேயே இவர்களை வாழத்தள்ளிய சமூகத்திடம் நாளும் இவர்கள் வடிக்கும் கண்ணீர் தகுந்த விலை கேட்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

இதையும் படிங்க: 'வெல்லமண்டி நடராஜனைக் காணவில்லை' - சுவரொட்டியால் பரபரப்பு

Last Updated : Apr 5, 2021, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.