ETV Bharat / state

வேட்பாளரை மாத்துங்க.. செய்யூர் தொகுதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்! - aiadmk cadres road blockade in chengalpattu

செங்கல்பட்டு: செய்யூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

aidmk candidate
செய்யூர் தொகுதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Mar 11, 2021, 1:27 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய சட்டப்பேரவை தொகுதியாக செய்யூர் (தனி) தொகுதி கருதப்படுகிறது. இங்கு 2011-16 காலகட்டத்தில் அதிமுகவின் வி.எஸ். ராஜு எம்எல்ஏவாக இருந்து வந்தார். 2016 தேர்தலில் இந்தத் தொகுதியில், தொகுதியை சேராத முட்டுக்காடு முனுசாமிக்கு, அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

திமுக தரப்பில் ஆர்.டி. அரசு போட்டியிட்டார். சொற்ப தபால் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஆர்.டி அரசு முட்டுக்காடு முனுசாமியைத் தோற்கடித்தார். அதிமுக சார்பில் உள்ளூர் வேட்பாளரை நிறுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என அந்த நேரத்தில் அக்கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், உள்ளூர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்பது, கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களின் விருப்பமாகவும் இருந்துவந்தது. இந்நிலையில், நேற்று (மார்ச்.10) வெளியான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில், செய்யூர் தொகுதிக்கு கணிதா சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து, தொகுதிக்கு சம்பந்தமில்லாதவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, சாலை மறியலும் செய்தனர். உள்ளூரிலேயே முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ் ராஜு, மாவட்ட மருத்துவர் அணி துணை செயலாளர் பிரவீன்குமார் போன்ற தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் இருக்கும் நிலையில், கணிதா சம்பத்திற்கு இங்கு ஏன் இத்தொகுதி ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

செய்யூர் தொகுதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

எளிதாக ஜெயிக்க வேண்டிய செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதி, அதிமுகவின் கையை விட்டு இந்தத் தேர்தலிலும் நழுவும் என அதிருப்தி தெரிவிக்கின்றனர், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இதையும் படிங்க:கரோனா விதிமுறைகளுடன் வேட்பு மனு தாக்கல் நடைபெறும்’ - ஆட்சியர் செந்தில் ராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.