ETV Bharat / state

உடைந்து விழுந்த பள்ளி வேனின் அவசர வழி கதவு - படுகாயமடைந்த பள்ளிச்சிறுமிக்கு தீவிர சிகிச்சை - தாம்பரம் பள்ளி சிறுமிக்கு சிகிச்சை

தாம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து உடைந்த அவசர வழி கதவின் வழியாகப்பள்ளி சிறுமி ஒருவர் கீழே விழுந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 22, 2022, 8:56 PM IST

செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்குச்சொந்தமான வேனின் அவசரவழி கதவு கழன்று விழுந்த விபத்தில், வேனிலிருந்த பள்ளி சிறுமி ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார். இந்நிலையில், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை வழக்கம்போல் பழைய பெருங்களத்தூர், பாரதிநகர், கிருஷ்ணாநகர் ஆகிய பகுதிகளில் இருந்து 31 பேரை பள்ளி வாகனமான மினி வேனில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச்சென்று கொண்டிருந்தனர்.

பழைய பெருங்களத்தூர், பாரதி நகர், கிருஷ்ணா நகர் ஆகியப்பகுதி வழியாக செல்லும் இந்த வேன் இன்று (செப்.) பள்ளி மாணவர்கள் 31 பேருடன் வழக்கம்போல பிற மாணவர்களையும் ஏற்றியபடி, பார்வதி நகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவசரவழி கதவு (Emergency door) சாலையில் வேனிலிருந்து தனியாக உடைந்து விழுந்தது. இதனால், கதவின் அருகே அமர்ந்திருந்த ரியோனா(7) என்ற பள்ளி சிறுமி, அக்கதவின் வழியாக திடீரென கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் சிறுமிக்கு ஏழு பற்கள் உடைந்து முகம், கை, கால்களில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் அப்பகுதியிலிருந்தவர்கள் அச்சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தப்பி ஓட முயன்ற வேன் ஓட்டுநர் வெங்கட்ராமன் என்பவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அறிந்த பிற மாணவர்களின் பெற்றோர், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் எனக்கூறி பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

அவசர வழிக் கதவு உடைந்த; சிறுமியை ஏற்றி வந்த பள்ளி வேன்
உடைந்து விழுந்த பள்ளி வேனின் அவசர வழி கதவு - படுகாயமடைந்த பள்ளிச்சிறுமிக்கு தீவிர சிகிச்சை

பள்ளி வாகனத்தில் இருந்து சிறுமி சாலையில் விழுந்தபோது, பின்புறம் எந்த வாகனமும் வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி வாகனத்தில் அவசரவழி கதவு உடைந்து இருப்பதைப் பார்க்காமல் பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் மீதும், பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து பீர்க்கன்கரணை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை கலைப்பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.