ETV Bharat / state

Car accident: மதுராந்தகம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மூவர் பலி..! - Madurantakam Accident

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 16, 2023, 6:20 PM IST

Updated : Aug 16, 2023, 8:08 PM IST

செங்கல்பட்டு: திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இன்று (ஆகஸ்ட் 16) அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் மூன்று ஆண்கள் பயணம் செய்தனர். அந்த கார் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வந்து கொண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நிலைதடுமாறிய கார் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் பலமுறை உருண்டு தலை குப்புறக் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த மூன்று நபர்களும் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுராந்தகம் போலீசார் காருக்குள் சிக்கி உயிரிழந்த மூன்று நபர்களின் உடல்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தஞ்சை: திருக்காட்டுப்பள்ளியில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு!

இதனிடையே, கார் பலமுறை உருண்டு பள்ளத்தில் விழுந்திருந்ததால் காரின் கதவுகளை திறக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பிறகு, விபத்து நடத்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தலை குப்புறக் கவிழ்ந்திருந்த காரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் உதவியோடு நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நிமிர்த்தினர்.

இதையும் படிங்க: Veterinary Science: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 20 சதவீதம் கூடுதல் விண்ணப்பங்கள் - துணைவேந்தர் செல்வகுமார் தகவல்

இதனை அடுத்து, காரின் கதவுகளை உடைத்துத் திறந்து உள்ளே உயிரிழந்த மூவரின் உடல்களையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதன் பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த மூவரின் பெயர் கார்த்திக், நந்தகுமார் மற்றும் கதிரவன் என்பது தெரியவந்துள்ளது. இதில் கதிரவன் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் என்பதும் மற்ற இருவரும் திருவாரூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: "மாணவர்களிடம் ஜாதி மோதலை ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் திணிக்கின்றன" - திருமாவளவன் குற்றச்சாட்டு!

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இவர்கள் எதற்காக சென்னை நோக்கிச் சென்றனர்? என்பது குறித்தும் இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம்? குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓசியில் பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்ட 2 காவலர்கள்; வீடியோ வைரலானதால் நடவடிக்கை!

Last Updated : Aug 16, 2023, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.