ETV Bharat / state

நாளை மருத்துவமனைகள் செயல்பாடாது! - doctors stirke

தமிழ்நாட்டில் நாளை மருத்துவமனைகள் செயல்படாது என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.

ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்
author img

By

Published : Jun 16, 2019, 8:56 PM IST

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஜூன் 11ஆம் தேதி இளநிலை மருத்துவர் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த தாக்குதலைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு தழுவிய நிலையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

தாக்குதளுக்குள்ளான மருத்துவர்
தாக்குதலுக்குள்ளான மருத்துவர்

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரையில் மருத்துவச் சேவைகள் வழங்கப்படாது என இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கனகசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்கத்தாவில் நடந்த தாக்குதலில் நடுநிலை வகித்து வன்முறையாளர்களை கைது செய்ய வேண்டிய மேற்கு வங்க அரசு, மருத்துவர்களை மிரட்டும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது.

மருத்துவ மையங்களையும், மருத்துவ ஊழியர்களையும் பாதுகாக்க தேசிய அளவில் கடுமையான சட்டம் தேவை. மருத்துவ மையங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இத்தாக்குதலைக் கண்டித்து ஜூன் 17ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜூன் 18ஆம் தேதி 6 மணி வரை மருத்துவச் சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. மக்களின் நலன் கருதி அத்தியாவசிய மருத்துவச் சேவைகள் தொடரும். வெளி நோயாளிகள் பிரிவுகள் மட்டும் இயங்காது.

இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை
இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

இது போன்ற வன்முறைகள் தொடர்ந்தால் நோயாளிகளுக்கு எதிர்மறையான விளைவுகள் உண்டாகும். மருத்துவ மையங்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளையும் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

Intro:தமிழகத்தில் நாளை மருத்துவமனைகள் செயல்பாடாது
இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு Body:

சென்னை,
தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் 6 மணி வரையில் மருத்துவச் சேவைகள் வழங்கப்படாது என இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கனகசபாபதி வெளியிட்டுள்ள செய்தியில், மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ்.மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவர் பரிபா முகர்ஜி வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அதனைக் கண்டித்து ஜூன் 14 ந் தேதி இந்திய மருத்துவ சங்கத்தால் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நேரத்தில் நடுநிலை வகித்து காயப்பட்ட இளம் மருத்துவருக்கு ஆதரவு கரம் நீட்டி வன்முறையாளர்களைக் கைது செய்ய வேண்டிய மேற்கு வங்காள அரசு இளம் மருத்துவர்களை மிரட்டும் வகையில் நடந்துக் கொண்டிருக்கிறது.
மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. மருத்துவ மையங்களையும், மருத்துவ ஊழியர்களையும் பாதுகாக்க தேசிய அளவில் கடுமையான சட்டம் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது.

எனவே ஒரு நாள் போராட்டம் மட்டும் போதாது என்று நினைத்த தேசிய மருத்துவ சங்கம் அடுத்த 2 நாட்களும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி முக்கிய நடவடிக்கையாக ஜூன் 17 ந் தேதி காலை 6 மணி முதல் ஜூன் 18 ந் தேதி 6 மணி வரை மருத்துவச் சேவைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. மக்களின் நலன் கருதி அத்தியாவசிய மருத்துவச் சேவைகள் தொடரும். வெளி நோயாளிகள் பிரிவுகள் மட்டும் இயங்காது. அனைத்து சிறப்பு மருத்துவச் சங்கங்களும் எங்களுடன் இணைந்து போராடுகிறார்கள்.
ஏற்கனவே நாம் வன்முறைக்கு எதிரான முழுமையான எதிர்ப்பு என்று அறிவித்திருக்கிறோம். சர்வதேச மருத்துவ சங்கம், மருத்துவ அமைப்புகளுக்கு எதிராக வன்முறை சம்பவங்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி நேரத்தில் இது நடந்திருக்கிறது.
இந்திய அளவில் மருத்துவ அமைப்புகளுக்கான பாதுகாப்பு முறைகள் வகுக்கப்பட வேண்டும். போக்சோ சட்டம் சொல்லும் விதிமுறைகள் இந்த சட்டத்திலும் இணைக்கப்பட வேண்டும். மருத்துவ மையங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.
இது போன்ற வன்முறைகள் தொடர்ந்தால் நோயாளிகளுக்கு எதிர்மறையான விளைவுகள் உண்டாக்கும். மருத்துவ மையங்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளையும் ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டுவார்கள். மருவத்துவ ஊழியர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். எனவே இந்த கோரிக்கையை நிறைவேற்ற கடுமையான போராட்டத்திற்கும் தயராக இருக்கிறோம் என அதில் கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.