ETV Bharat / state

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

author img

By

Published : May 7, 2019, 2:42 PM IST

சென்னை: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் 12ஆம் வகுப்புக்கான தேர்தல் முடிவுகள், ஏப்.19ஆம் தேதி வெளியானது. தற்போது 10, 11ஆம் வகுப்புகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

2019ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அரசுத் தேர்வுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை காலை 9.30 மணிக்கு

  • www.tnresults.nic.in,
  • www.dge1.tn.nic.in,
  • www.dge2.tn.nic

ஆகிய இணையதளங்களில் அறியலாம். இதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 14ஆம் தேதி முதல் பள்ளித் தலைமையாசிரியர் வழியாக பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 10, 11, 13 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.