ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கை குறித்து இங்கெல்லாம் கருத்து சொல்லலாம்! - education policy 2019

மத்திய அரசின் புதிய தேசிய வரைவு கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாட்டில் பொதுமக்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது.

புதிய கல்விக் கொள்கை
author img

By

Published : Jul 14, 2019, 4:28 PM IST

மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கைக்கு பல்வேறுத் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.எழிலரசன் பேசும்போது, புதியக் கல்விக் கொள்கை இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் இருப்பதால் அதைத் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். இந்நிலையில் புதியக் கல்விக்கொள்கை தமிழாக்கம் செய்யப்பட்டு www.tnscert.org என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதியக் கல்விக் கொள்கை தொடர்பாகச் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அஞ்சல் வழியில் கருத்து தெரிவிக்க, "மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , டி.பி.ஐ.வளாகம், கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-6" என்னும் முகவரியிலும், மின் அஞ்சல் வழியாக கருத்து தெரிவிக்க secert.nep2019@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம். மேலும் 7373003359 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம். தேசியக் கல்விக் கொள்கை மீது வரும் 25ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

Intro:
புதிய வரைவு கல்வி கொள்கை
4 மண்டலங்களில் கருத்து கேட்பு
Body:
புதிய வரைவு கல்வி கொள்கை
4 மண்டலங்களில் கருத்து கேட்பு

சென்னை,
மத்திய அரசின் புதிய வரைவு தேசிய வரைவு கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் 4 மண்டலங்களில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும பயிற்சி நிறுவனம் பொதுமக்கள், கல்வியாளர்களிடம் கருத்துகளை கேட்க திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கைக்கு பல்வேறுத் தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புதியக் கல்விக்கொள்கையில் உள்ள கருத்துகளை பொதுமக்கள் எளிதில் புரிந்துக் கொள்ளும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. புதியக்கல்விக் கொள்கை குறித்து சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.எழிலரசன் பேசும்போது, புதியக் கல்விக்கொள்கை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதால் அதனை பொதுமக்கள் புரிந்துக் கொண்டு கருத்தினை தெரிவிக்க முடியாது. எனவே தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், புதிய வரைவுக் கல்விக் கொள்கை என்பது இறுதியானது அல்ல. தமிழக மக்களின் கருத்தினை கேட்கப்பட்டு அதன் பின்னர், மத்திய அரசிற்கு தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறுவோம் என தெரிவித்தார்.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை சமீபத்தில் வெளியிட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்படிருந்த சூழலில், அதனைத் தமிழாக்கம் செய்து, தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் www.tnscert.org என்னும் வலைத்தள முகவரியில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதனை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் பார்வையிட்டு இந்த வரைவு தேசியக்கல்விக்கொள்கை மீது வரும் 25 ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.
மின் அஞ்சல் வழியாக கருத்து தெரிவிக்க விரும்புவர்கள் secert.nep2019@gmail.com என்னும் மின் அஞ்சல் முகவரியிலும், அஞ்சல் வழியில் கருத்து தெரிவிக்க விரும்புவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , டி.பி.ஐ.வளாகம், கல்லூரிச் சாலை,நுங்கம்பாக்கம், சென்னை-6 என்னும் முகவரியிலும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்னும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும் கருத்துகளை தெரிவிக்க விரும்புபவர்கள் 7373003359 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.

இந்த வரைவு தேசியக் கல்விக் கொள்கை மீதான கருத்தரங்குகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மண்டல வாரியான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் ம் நடைபெற உள்ளது.

தமிழ் புரியாதவர்கள் ஆங்கிலத்தை பார்க்கவும்

மேலும் கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறவர்கள் தங்களின் கருத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தெரிவிக்கலாம். தெரிவிக்கவிரும்பும் கருத்துடன் இயல் எண், பக்கம் எண் மற்றும் பத்தியின் விவரங்களை குறிப்பிட வேண்டும். தமிழ் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களில் தெளிவுபெற ஆங்கிலப் பிரதியுடன் ஒப்பிட்டுப்பார்க்கவும் என அதில் கூறப்பட்டுள்ளது. Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.