திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். திங்களன்று திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோவில் தெரு, வண்டிப்பாதை உள்ளிட்ட பல பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு குடிசை உணவகத்தில் அமர்ந்துகொண்டு மன்சூர் சாப்பிட்டார். அவரை வேடிக்கை பார்க்கப் பொதுமக்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது தனக்கு அருகில் நின்ற ஒரு தாயிடம் இருந்த குழந்தைக்கும் ஊட்டிவிட்டு சாப்பிட்டார். மன்சூர் அலிகானின் இந்த செயல் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.