ETV Bharat / state

10% இட ஒதுக்கீடு விவகாரம்; இன்று அனைத்துக் கட்சி கூட்டம்! - அனைத்து கட்சி கூட்டம்

சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்க முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

EPS
author img

By

Published : Jul 8, 2019, 7:58 AM IST

Updated : Jul 8, 2019, 10:22 AM IST

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக மோடி தலைமையிலான அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடளுமன்றத்தில் வாக்களித்தன. அதேவேளையில், இது சமூகநீதிக்கு எதிரானது என்றும், இட ஒதுக்கீட்டின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது என்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதன் கூட்டணி கட்சியினர்(காங்கிரஸ் தவிர) இதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகின்றனர். ஆளும் அதிமுக அரசு நாடாளுமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தாலும், உறுதியான நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், 10% இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் விரைவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த அனைத்துக் கட்சி கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதில் எட்டப்படும் முடிவுக்கு ஏற்றார் போல அரசின் கொள்கை முடிவுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:

all party meeting

Conclusion:
Last Updated : Jul 8, 2019, 10:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.