ETV Bharat / state

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளை முச்சந்தியில் நிறுத்துங்கள்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் பெயர்களை பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Apr 10, 2019, 1:25 PM IST

பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாநில அரசின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அவ்வாறு அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பல்வேறு பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர். பள்ளிகளைக் கண்காணிக்கும் பொறுப்பினையும், அங்கீகாரம் அளிக்கும் அதிகாரத்தையும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடந்தாண்டு வழங்கியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து அங்கீகாரமின்றி தனியார் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ”வட்டாரக் கல்வி அலுவலரும், மாவட்டக் கல்வி அலுவலரும் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து அங்கீகாரம் பெற்றதற்கான உத்தரவினை கேட்டுப்பெற வேண்டும். அவ்வாறு அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் குறித்த பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வரும் 23ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

அதனடிப்படையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் சார்ந்த விபரத்தினை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அறியும் வகையில் செய்தித்தாளில் விளம்பரம் மூலமோ, செய்தி மூலமோ தெரியப்படுத்த வேண்டும். அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் முன்பகுதியில், இப்பள்ளிக்கு அங்கீகாரம் இல்லை என்பதை பெற்றோர்கள் காணும் வகையில் ஒட்டவேண்டும். அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விபரங்கள் வகுப்புவாரியாக எண்ணிக்கையுடன் பெறப்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Intro:அங்கீகாரம் இல்லாத பள்ளியின் பெயரை
பெற்றோர்கள் அறியும் வகையில் ஒட்ட உத்தரவு

Body:சென்னை, தமிழகத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் பெயர்களை பொதுமக்கள் அறியும் வகையில் ஓட்ட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாநில அரசின் அங்கீகாரத்தை பெற வேண்டும். அவ்வாறு அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
பள்ளிகளை கண்காணிக்கும் பொறுப்பினையும், அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் செய்யும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடந்தாண்டு வழங்கியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து அங்கீகாரம் இன்றி தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வட்டார கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த அங்கீகாரம் பெற்ற தற்கான உத்தரவினை கேட்டுப்பெற வேண்டும். அவ்வாறு அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் குறித்த பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வரும் 23ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
அதனடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் சார்ந்த விபரத்தினை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அறியும் வகையில் பத்திரிக்கை செய்தி வெளியிட வேண்டும்.
அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் முன்பகுதியில் இப்பள்ளி அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் ஒட்டப்பட வேண்டும்.
அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் படிக்கும் மாணவர்களின் விபரங்கள் வகுப்பு வாரியாக எண்ணிக்கையுடன் பெறப்பட வேண்டும்.
2019 20 ஆம் கல்வியாண்டு துவங்கும் பொழுது அவரவர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் என்பதையும் அனைத்து குழந்தைகளும் அங்கீகாரம் உள்ள பள்ளியில் கல்வி படிக்கின்றனர் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் பட்டியல் வெளியீட்டு, அதன் முகப்பில் அங்கீகாரமற்ற செயல்படும் பள்ளிகள் என ஓட்டினால் அதிக அளவில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் பாதிக்கப்படும் என தெரிகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.