ETV Bharat / state

அமைச்சர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் பாராட்டு!

சென்னை: சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம்
author img

By

Published : Jul 19, 2019, 11:52 AM IST

ஆன்மிகத்திலும் தமிழுக்கும் தொண்டாற்றுபவர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என்றும் திருக்குறளை உலக நூலாக "ஐக்கிய நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு" (யுனெஸ்கோ) மூலம் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். அதேபோல "பத்திரிகையாளர் நல வாரியம்" அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார்.

இதுகுறித்து, பால் முகவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு பல நல்ல அறிவிப்புகளை வெளியிட்டுள்ள அமைச்சர்கள் (கே.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ) இருவருக்கும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அன்னை தமிழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், தலைநகர் சென்னையில் சுமார் 1000அடி உயரத்தில் தமிழன்னைக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலையாக அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 19.07.19

தமிழறிஞர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் விருது, விரைவில் "பத்திரிகையாளர் நல வாரியம் - தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் பாராட்டு..

பால் முகவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிறமொழி கலப்பின்றி படைப்புகளை வெளியிட்டு வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் மாத இதழ்களில் இருந்து ஓவ்வொரு பிரிவிலும் ஒரு இதழ் தேர்வு செய்து அவற்றுக்கு "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனார் பெயரில் விருதும், 1லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாகவும், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் எனவும்,

ஆன்மீக தொண்டாற்றும் ஒருவருக்கு அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெயரிலும்,
தமிழறிஞர் ஒருவருக்கு தேவநேயப் பாவாணர் பெயரிலும்,
தமிழ் தொண்டாற்றி வரும் மகளிர் ஒருவருக்கு காரைக்கால் அம்மையார் பெயரிலும்,
வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் தொண்டாற்றி வரும் தமிழறிஞருக்கு வீரமாமுனிவர் பெயரிலும் தமிழக அரசு சார்பில் விருதுகளும், ரொக்கப் பரிசுகளும், பாராட்டு சான்றிதழும், பொன்னாடையும் வழங்கப்படும்.

அத்துடன் உலகப்பொதுமறை நூலாம் திருக்குறளை உலக நூலாக "ஐக்கிய நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு" (யுனெஸ்கோ) மூலம் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த "தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்" மாண்புமிகு கே.பாண்டியராஜன் அவர்களுக்கும்,

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறையினரின் நலனை காத்திடும் வகையில் "பத்திரிகையாளர் நல வாரியம்" அமைத்திட நிதித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும், அக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் "பத்திரிகையாளர் நல வாரியம்" அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவித்த "செய்தித் துறை அமைச்சர்" மாண்புமிகு கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் "தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்" சார்பில் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக விளங்கும் அன்னைத் தமிழிற்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் சுமார் 1000அடி உயரத்தில் தமிழன்னைக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலையாக அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்..

tn_che_01_milk_association_agents_announcement_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.