பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வு இயக்ககம் இன்று காலை வெளியிட்டது. இதில் மொத்தம் 95.2 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 97 விழுக்காடு மாணவிகளும், 93.3 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
பாட வாரியாக தேர்ச்சி விழுக்காட்டில் மொழிப்பாடங்களில் 96.12 விழுக்காடும், ஆங்கிலத்தில் 97.35 விழுக்காடும், கணிதத்தில் 96.46 விழுக்காடும், அறிவியல் 98.58 விழுக்காடும் மற்றும் சமூக அறிவியலில் 97.07 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியான தேர்ச்சியில் 98.53 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் முதலிடமும், 98.48 விழுக்காடு பெற்று ராமநாதபுரம் இரண்டாவது இடத்திலும், 98.45 நாமக்கல் மூன்றாவது இடமும் பெற்றுள்ளன. இதில் வேலூர் 89.98 விழுக்காடுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.